உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்ததை அடுத்து, நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இன்றைய ஆட்டத்தின் இரண்டாம் செஷன் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்திருந்தது. அதன் மூன்றாவது செஷனை கான்வே - லாத்தேம் இணை தொடங்கியது.
தொடக்கத்தில் இந்த இணை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பொறுமையாக கையாண்டது. இதனால், கோலி அஸ்வினிடம் பந்தை கொடுத்தார். கடந்த இன்னிங்ஸைப் போலவே அஸ்வின்தான், இந்த இன்னிங்ஸிலும் முதல் விக்கெட்டை எடுத்தார். முதலில், லேத்தம் 9 ரன்களிலும், கான்வே 19 ரன்களிலும் விக்கெட் எடுத்து வெளியேற்றினார் அஸ்வின்.
அதன்பின்னர், களத்தில் நின்ற டெய்லர் - வில்லியம்சன் ஜோடி இந்திய வீரர்களின் நம்பிக்கை தகர்த்துவிட்டது. இறுதிவரை தங்களது விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடிய வில்லியம்சன் - டெய்லர் ஜோடி நியூசிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
கடைசியாக வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஸ் டெய்லர் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பெருமையை பெற்றது வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி.
இதையும் படிங்க: 4ஆவது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!