நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
முன்னதாக நிபா வைரஸ் பரவி வந்தது. இதனை தடுப்பதற்காக ஒன்றிய நோய் தடுப்பு குழுவினர், மாநில சுகாதாரத்துறையினர் கேரளாவில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் காரணமாக நிபா வைரஸ் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் வயநாடு பகுதியில் தற்போது புதிய வகை நோரா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.