ETV Bharat / bharat

கரோனா 3.0: புதிய 'டெல்டா பிளஸ்' வகை கண்டுபிடிப்பு

author img

By

Published : Jun 15, 2021, 1:15 PM IST

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை வைரஸ், மேலும் உருமாறி ‛டெல்டா பிளஸ்' ஆக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

CORONA 3
டெல்டா பிளஸ்

கடந்த 2019இல் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. இதுவரை உலகளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.70 கோடியைக் கடந்துள்ளது.

இந்த வைரஸ் பல விதமாக உருமாற்றம் அடைந்து , பல்வேறு நாடுகளுக்குப் பரவ தொடங்கியது. அத்தகைய கரோனா வேரியண்ட்-களுக்கு , டெல்டா, ‘கப்பா, ஆல்பா,பீட்டா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சார்ஸ்-கரோனா வைரஸ்

இதில், இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பில் டெல்டா வகை சார்ந்த சார்ஸ்-கரோனா வைரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

delta
புதிய 'டெல்டா பிளஸ்' வகை கண்டுபிடிப்பு

டெல்டா பிளஸ்

இந்த டெல்டா வகை வைரஸ், மேலும் உருமாறி ‛டெல்டா பிளஸ்' ஆக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆறு பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ்

இருப்பினும் இந்தப் புதிய வகை டெல்டா கரோனாவால் தற்போதைக்கு பெரிய பாதிப்பு இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை இந்தியாவில் ஆறு பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORONA 3
சார்ஸ்-கரோனா வைரஸ்

கரோனா 3.0 அச்சம்

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்தில், கரோனா வைரசின் புதிய உருமாற்றம் கரோனா 3.0 என்கிற பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

CORONA 3
கரோனா 3.0

இதையும் படிங்க: கரோனா வைரஸை அழிக்கும் 3டி மாஸ்க் கண்டுபிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.