கடந்த நவம்பர் மாதம் புதிதாக தோன்றிய உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரானால் உலக நாடுகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. விஞ்ஞானிகள் எச்சரித்தபடி ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவி வருகிறது.
இந்நிலையில் மற்றொரு புதிய உருமாறிய கரோனாவானது இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரானில் இருந்து உருவானதாக புதிய துணை மாறுபாடான வைரஸுக்கு பிஏ-2 என பெயரிடப்பட்டுள்ளது.
ஒமைக்ரானின் புதிய மாறுபாடான பிஏ 2 வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது நார்வே, ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் புதிய உருமாறிய கரோனா விரைவில் பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரான் வைரசின் புதிய மாறுபாடு காரணமாக கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவப்பு மிளகாய் தீபிகா படுகோன்!