ETV Bharat / bharat

அடுத்தடுத்து இந்தியா வரும் உலக தலைவர்கள்.. இந்த முறை யார்? - நேபாள பிரதமர் இந்தியா பயணம்

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகிறார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா
author img

By

Published : Mar 26, 2022, 11:02 PM IST

டெல்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகிறார் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் பேரில் நேபாள பிரதமரின் வருகை அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வரும் தியூபா, ஏப்ரல் 2ஆம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். தியூபா வாரணாசிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமராக பதவியேற்றபிறகு தியூபா மேற்கொள்ளும் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

நேபாள பிரதமரின் இந்தியா பயணம் இரு நாடுகளுக்கு இடையில் அவ்வப்போது நடக்கும் உயர்மட்ட பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான பயணம். இருநாட்டின் பரஸ்பர நலன், உறவு, வளர்ச்சி, பொருளாதாரம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும்.

முன்னதாக, இந்தாண்டு ஜனவரியில் குஜராத்தில் நடைபெறவிருந்த வணிக உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக தியூபா இந்தியா வரவிருந்தார். ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாக உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ நேற்று (மார்ச் 25) இந்தியா வந்தார். இந்தியா வந்த அவர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.