புடாபெஸ்ட் : ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் 88 புள்ளி 17 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நீரஜ் சோப்ரா நிகழ்த்தினர்.
-
.@Neeraj_chopra1 brings home a historic gold for India in the javelin throw 👏#WorldAthleticsChamps pic.twitter.com/YfRbwBBh7Z
— World Athletics (@WorldAthletics) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@Neeraj_chopra1 brings home a historic gold for India in the javelin throw 👏#WorldAthleticsChamps pic.twitter.com/YfRbwBBh7Z
— World Athletics (@WorldAthletics) August 27, 2023.@Neeraj_chopra1 brings home a historic gold for India in the javelin throw 👏#WorldAthleticsChamps pic.twitter.com/YfRbwBBh7Z
— World Athletics (@WorldAthletics) August 27, 2023
நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவாலாக இருந்த பாகிஸ்தான் வீரர் ஹர்சத் நதீம் 87 புள்ளி 82 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதி போட்டியில் கலந்து கொண்ட மற்ற இந்திய வீரர்களான கிஷோர் 84 புள்ளி 77 மீட்டரும், டி.பி. மனு 84 புள்ளி 14 மீட்டரும் வீசி முறையே 5 மற்றும் 6வது இடங்களை பிடித்தனர்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளில் ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து மற்ற இரண்டு இந்திய வீரர்கள் டி.பி. மனு மற்றும் கிஷோர் ஆகியோர் களம் இறங்கினர். முதல் சுற்றில் 88 புள்ளி 77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அவர் தனது முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார்.
இரண்டாவது வாய்ப்பில் 88 புள்ளி 17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, பட்டியலில் முதலிடம் பிடித்தார். மூன்றாவது வாய்ப்பில் 86 புள்ளி 32 மீட்டர் தூரமும், நான்காவது வாய்ப்பில் 84 புள்ளி 64 மீட்டர் தூரமும், ஐந்தாவது வாய்ப்பில் 87 புள்ளி 73 மீட்டர் தூரமும் வீசினார். இறுதி வாய்ப்பில் 83 புள்ளி 98 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
பாகிஸ்தான் வீரர் ஹர்சத் நதீம் 87 புள்ளி 82 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். செக் குடியரசை சேர்ந்த யக்கூப் வெண்கலம் வென்றார். இந்திய வீரர்கள் கிஷோர் 84 புள்ளி 77 மீட்டரும், டி.பி. மனு 84 புள்ளி 14 மீட்டரும் வீசி முறையே 5 மற்றும் 6வது இடங்களை பிடித்தனர்.
2021 டோக்கியோ ஒலிம்பிக், 2022 ஆம் ஆண்டு டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப், உலக தடகள சாம்பியன்ஷிப் என தொடந்து அசத்தி வரும் நீரஜ் சோப்ரா, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் வரலாற்று சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நீரஜ் சோப்ராவுடன் போட்டி மனப்பான்மையா? - மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்!