இப்பெண்கள் பயணித்துக்கொண்டிருந்த வேன் மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் வந்த மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கரியாபண்ட் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுக்நந்தன் ரத்தோர் கூறுகையில், "இந்த விபத்து நேற்று (ஜூன்.12) இரவு 11 மணியளவில் பண்டுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ளது.
ஓட்டுநர் வேன் மீது இருந்த கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால், வேன் மரத்தில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது" என்றார்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாகௌட்டி நிஷாத், கலா பாய், பர்வத் பாய், கெஜ் பாய், தேஜ் பாய் என்ற ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பதினைந்து வயது சிறுவன், ஓட்டுநர் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். ஒரு பெண் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினார். விபத்தில் காயமடைந்தவர்கள் ராஜீமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு அனுப்பப்பட்டனர்.
இதையும் படிங்க:கார் கவிழ்ந்து விபத்து: 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!