பாட்னா: பிகார் மாநிலத்தின் 17ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குறைந்தளவு வெற்றி பெற்றாலும் ஆட்சி செய்யும் வல்லமையைப் பெற்றுள்ளது.
பிகாரில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 122 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருக்க வேண்டும்.
110 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 74 இடங்களைப் பெற்று, ஒரு தொகுதியில் முன்னிலை வகுக்கிறது. 115 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 42 இடங்களை மட்டுமே பெற்று பின்தங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான பாஜக 72, விகாசின் இன்சான் கட்சி (விஇபி) 4 இடங்களிலும், ஹிந்துஸ்தான் அவம் மோர்ச்சா (எச்ஏஎம்) நான்கு இடங்களிலும் வெற்றி பெற்று 125 இடங்களைப் பிடித்து தனிப்பெரும்பான்மையை விட மூன்று இடங்களை அதிகமாக பெற்றுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் 'மஹாகத்பந்தன்' கூட்டணி 110 இடங்களில் வென்றுள்ளது. இதில், 75 இடங்களை பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளது. அக்கட்சியின் வாக்கு வங்கி 23.03 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
மஹாகத்பந்தன் சார்பில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மஹாகத்பந்தன் கூட்டணியில் அங்கம் வகித்த இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (லிபரேஷன்) 12 இடங்களிலும் வென்றுள்ளன.
பிற கட்சிகள் எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதில், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMM) ஐந்து இடங்களையும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஓரிடத்திலும் வென்றுள்ளன.
இதையும் படிங்க: கேதர்நாத் யாத்ரீகர்களுக்கு சிவலிங்க பிரசாதம்!