ETV Bharat / bharat

கர்ப்பிணிகளுக்காக வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் ஆரம்பித்த என்.சி.டபிள்யூ - தேசிய மகளிர் ஆணையம்

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணிகளுக்கு உதவுவதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணையும், மின்னஞ்சல் முகவரியும் தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது.

NCW
என்.சி.டபிள்யூ
author img

By

Published : Apr 30, 2021, 9:55 AM IST

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பெருந்தோற்று காலத்தில் அதிக ஆபத்தைச் சந்திக்கும் கர்ப்பிணிகளுக்காக வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையைத் தேசிய மகளிர் ஆணையம் ஆரம்பித்துள்ளது.

இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் சேவை மையத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள், மருத்துவ உதவி உட்பட எவ்வித பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பார்கள். இச்சேவைக்கு 9354954224 என்கிற வாட்ஸ்அப் எண்ணுக்குத் தாய்மார்கள் தங்களின் விவரங்களைக் குறுஞ்செய்தி அனுப்பினாலே போதுமானது ஆகும். இதே போல, helpatncw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வெளியிட்டுள்ளனர்.

கரோனா பெருந்தோற்று காலத்தில், ஆரம்பத்தில் இருந்தே பல வகையான உதவிகளைப் பெண்களுக்குத் தேசிய மகளிர் ஆணையம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கர்நாடகா பெண்ணின் விழிப்புணர்வூட்டும் செயல்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.