ETV Bharat / bharat

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியாவுக்கு கோவிட் பாதிப்பு - தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சூலே

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுப்ரியா சூலேவுக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Supriya Sule
Supriya Sule
author img

By

Published : Dec 30, 2021, 1:29 AM IST

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சுப்ரியா சூலே. மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரின் மகள் இவர்.

மகாராஷ்டிராவின் பாராமதி மக்களவைத் தொகுதி உறுப்பினரான இவருக்கு கோவிட் பாதிப்பு தற்போது உறுதியாகியுள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது கணவர் சதானந்த் சூலேவுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், மக்கள் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Sadanand and I, both of us have tested positive for COVID - 19. We do not have any symptoms. Requesting everyone who has come in contact with us to get themselves tested. Take Care.

    — Supriya Sule (@supriya_sule) December 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோல், மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாடுக்கும் கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

கடந்த ஒரு நாளில் மட்டும் இரண்டாயிரத்து 172 பேருக்கு கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,492ஆக உள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.