தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜூலை 17)டெல்லியில் சந்தித்தார்.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகதி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பாஜக எதிர்கட்சியாக உள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மோடியை சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், நாளை (ஜூலை 18) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சர்வதேச நீதி தினம்- குற்றவியல் நீதிமன்றம் வரலாறு!