ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் சீலெருவிலிருந்து (Seeleru) புனேவுக்கு போதைப்பொருள்கள் பெரும் அளவில் கடத்தப்படுவதாகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்திற்கு (Narcotics Control Bureau) ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, பெட்டா அம்பர்பேட் அருகிலுள்ள சுங்கச்சாவடிக்கு வந்த டிரக்கை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதில், ஆயிரக்கணக்கான பாக்கெட்களில் போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு முந்திரி பாக்கெட்களிலும் சுமார் 2 கிலோ கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் இரண்டு டன் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல்செய்த என்சிபி, டிரக்கிலிருந்த நான்கு பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் 'ஷட்டரை' வைத்து சென்னையில் வித்தைக் காட்டும் நபர்கள்; பல லட்சம் அபேஸ்!