மும்பை: மகாராஷ்ராவின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான நவாப் மாலிக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "அக்டோபர் 2ஆம் தேதி இரவு கார்டிலியா எனும் கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில் பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் கான் உள்பட 11 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) பிடித்துள்ளனர்.
அடுத்த நாள் (அக். 3) காலை வரை மும்பை காவல்துறையினரும் இந்தத் தகவல்தான் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீடீரென காலையில் எட்டு பேர் பிடிப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். இதற்கிடையே மூன்று பேரை விடுவித்துள்ளனர்.
பாஜக தலைவரின் மருமகன்
ரிஷப் சச்தேவா, பிரதிக் காபா, அமீர் பர்னிச்சர்வாலா ஆகிய மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரிஷப் சச்தேவா, பாஜகவின் இளைஞரணி தலைவரான மோகித் கம்போஜ்-இன் மருமகன் என்பது தெரியவந்தது.
-
Rishabh Sachdeva and Pratik Gaba can be seen exiting from the NCB office after detention. pic.twitter.com/1KTS3QykPs
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rishabh Sachdeva and Pratik Gaba can be seen exiting from the NCB office after detention. pic.twitter.com/1KTS3QykPs
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) October 9, 2021Rishabh Sachdeva and Pratik Gaba can be seen exiting from the NCB office after detention. pic.twitter.com/1KTS3QykPs
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) October 9, 2021
பிடிப்பட்டு இரண்டு மணிநேரத்தில் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரிஷப் சச்தேவா விடுவிக்கப்பட்டபோது அவரது தந்தை என்சிபி அலுவலகம் வந்து அவரை அழைத்துசென்றுள்ளார்.
கைதான 11 பேரும் முதலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னரே, மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
என்சிபி இயக்குநருக்கும் பாஜகவுக்கும் தொடர்பா?
யார் உத்தரவின் பேரில் மூன்று பேரை அலுவலர்கள் விடுவித்தனர் என்பது குறித்து என்சிபி இயக்குநர் சமீர் வான்கடே விளக்கம் அளிக்க வேண்டும்.
அவரின் செல்ஃபோன் அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். டெல்லி, மகாராஷ்டிராவில் உள்ள பாஜக தலைவர்கள் உடன் சமீர் பேசியுள்ளார். இதுதொடர்பாக விரிவான விசாரணை வேண்டும்" என்றார்.
-
Aamir Furniturewala can be seen exiting from the NCB office after detention. pic.twitter.com/c956NA4YBn
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Aamir Furniturewala can be seen exiting from the NCB office after detention. pic.twitter.com/c956NA4YBn
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) October 9, 2021Aamir Furniturewala can be seen exiting from the NCB office after detention. pic.twitter.com/c956NA4YBn
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) October 9, 2021
மேலும், சோதனை மேற்கொள்ளப்பட்ட கப்பலில் 3000 பேர் இருந்தனர். 12 மணிநேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் 11 பேர் மட்டும்தான் கிடைத்தார்களா எனவும் அவர் கேள்வியெழுப்பி உள்ளார்.
முன்னதாக, ஷாருக் கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டது போலி என்றும், அடுத்த இலக்கு ஷாருக்கான் என்றும் நவாப் மாலிக் தெரிவித்திருந்தது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டை விட்டு தப்ப மாட்டேன் - நீதிமன்றத்தில் ஆர்யன் கான் உறுதி