இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நக்சல் உத்தர் பஸ்தார் பிரதேசக் குழுவின் செய்தித் தொடர்பாளர் சுக்தேவ், “சத்தீஸ்கரில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி காலை ஆறு மணிக்கு வெடிகுண்டுகளை நிலத்தில் புதைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. அந்த குண்டுவெடிப்பில் நக்சல் கிளர்ச்சியாளர் சோம்ஜி என்ற சஹாதேவ் வேட்டா உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி நக்சல் சோம்ஜியின் மரணம் குறித்து பிற சகாக்கள் பதாகைகளை ஒட்டியுள்ளனர். அதில் சோம்ஜியை தியாகி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க...முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிப்பொருள் நிரப்பிய வாகனம் பறிமுதல்: காவல் துறை விசாரணை!