கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை (டிச.31) குஜராத்தின் ஓகாவில் உள்ள இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் துவாரகாவை பார்வையிட்டார்.
அங்கு, குஜராத், டாமன் மற்றும் டையூ கடற்படை பகுதிக்கு தொடர்புடைய கடல்சார் நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அலுவலர்கள் கடற்படைத் தலைவருக்கு விளக்கமளித்தனர்.
இதையடுத்து, டாமன் மற்றும் டையூ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடலோர கண்காணிப்பு பணிகளை பார்வையிட்ட அவர் கடற்படை நிலையம் ஓகா மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் கலந்தாலோசித்தார்.
பின்னர்,பேசிய அவர், இந்த பொன்விழா ஆண்டில் ஐ.என்.எஸ் துவாரகாவின் தரமான பணிகளை பராட்டுவதாகவும், இதேபோன்று சிறப்பாக பணியை தொடர ஊக்குவிப்பதாகவும் கூறினார்.
மேலும்,அனைத்து பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார்.
இதையும் படிங்க: காவலர்கள் பற்றாக்குறை - தப்பிய ஒரு யூனியன் பிரதேசம்!