உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட குடும்பத்தினரை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று(அக். 8) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர் ரமன் கஷ்யாப் என்பவரும் உயிரிழந்த நிலையில், அவரது இலத்திற்கும் சித்து நேரில் சென்றார்.
அங்கு அவர், லக்கிம்பூர் சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து, ரமனின் வீட்டிலேயே உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ராவின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின்போது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றி இருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியா 75' - புதிய வடிவில் வெளியான 'மிலே சுர் மேரா துமாரா' பாடல்