ETV Bharat / bharat

துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லாயக் தற்கொலை - துப்பாக்கி சுடும் வீராங்கனை தற்கொலை

கொல்கத்தாவில் துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லாயக் தற்கொலை செய்து கொண்டார்.

கோனிகா லாயக் தற்கொலை
கோனிகா லாயக் தற்கொலை
author img

By

Published : Dec 16, 2021, 7:55 PM IST

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோனிகா லாயக் (26). சொந்தமாக துப்பாக்கி வாங்க வசதி இல்லாததால் இரண்டு முறை தகுதி பெற்றபோதிலும், இவர் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட இயலாத சூழலில் இருந்தார்.

இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, நடிகர் சோனு சூட் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் ரைஃபிளை அவருக்கு பரிசாக அளித்தார்.

பின்னர், கொல்கத்தாவில் அர்ஜுனா விருது பெற்ற ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வந்தார் கோனிகா லாயக். இவர் இன்று தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த வாரம், தேசிய போட்டிகளில் குறைவான புள்ளிகளை பெற்ற இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை குஷ்சீரத் கவுர் சந்து தற்கொலை செய்துகொண்டார்.

அக்டோபர் மாதம் துப்பாக்கி சுடும் வீரரான ஹுனார்தீப் சிங் சோஹல், செப்டம்பரில் நமன்வீர் சிங் பிரார் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: VIJAY DIWAS 2021: போர் நினைவுச் சின்னத்தில் ஸ்டாலின் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.