கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ள சீனா மறுப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சீனாவுடன் வீணான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஹாட் ஸ்பிரிங், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் நடைபெற்றிருக்கும் சீன ஆக்கிரமிப்பு இந்தியாவின் வியூக ரீதியான நலனுக்கு நேரடியான அச்சுறுத்தல். அரசின் வீணான பேச்சுவார்த்தையால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. நம் நாடு சிறப்பு வாய்ந்தது.
சர்ச்சைக்குரிய பகுதிகளில் ராணுவத்தை திரும்பபெறும் பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவு எட்டப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால், இந்தியாவுக்கு அதனால் எந்த பலனும் இல்லை" என பதிவிட்டுள்ளார்.