ETV Bharat / bharat

தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை நினைவுகூருவோம்!

மனித வாழ்வில் போபால் விஷவாயு விபத்து எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நினைவுகூரும் வகையில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

மாசு
மாசு
author img

By

Published : Dec 2, 2020, 9:32 PM IST

கடந்த 1984ஆம் ஆண்டு, இதே நாளின் நள்ளிரவில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் ரசாயன ஆலையில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த நாள்களில், உயிரிழப்பு எண்ணிக்கை 4,000 தாண்டியது. அந்த விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை குறைபாடுகளுடன் பிறக்கின்றன.

இன்றோடு அந்த விபத்து ஏற்பட்டு 36 ஆண்டுகள் ஆனாலும், அதிலிருந்து நாம் என்ன கற்றோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உலகின் மிக பெரிய தொழிற்சாலை விபத்து என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அதனை குறிப்பிடுகிறது. மனித வாழ்வில் அந்த விபத்து எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நினைவுகூரும் வகையில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

மனிதர்களின் செயல்பாடுகளிலிருந்து சூழலியலை பாதுகாக்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்நாள் நினைவுக்கூரப்படுகிறது. தொழிற்சாலைகளால் நிகழும் விபத்துகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாட்டு சட்டங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே, மாசு குறிப்பாக காற்று மாசு குறித்த விவாதம் பொதுவெளியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குளிர்காலங்களில், தேசிய தலைநகர் டெல்லி மற்றும் இந்தியாவின் பெரு நகரங்களில் புகைமூட்டம் சூழ்ந்து காட்சியளிப்பதை தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையே காற்று மாசு அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இம்மாதிரியான தொழிற்சாலைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

தொழில்நுட்பத்தின் உதவியோடு மாசுவை கண்காணிப்பது அவசியமாகிறது. சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதன் மூலமாகவே போபால் விஷவாயு விபத்து போன்றவற்றை தவிர்க்க முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.