மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 75.
தனது நடிப்பிற்காக மூன்று தேசிய விருதுகளைப் சுரேகா சிக்ரி பெற்றுள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பதாய் ஹோ படத்தில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
சுரேகா சிக்ரி கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஜோயா அக்தர் இயக்கத்தில் வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.