ETV Bharat / bharat

ட்விட்டர் ஃபாலோயர்கள்: உலக அரசியல் தலைவர்களில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

நிகழ்கால அரசியல் தலைவர்களில் அதிகம் ஃபாலோயர்களைக் கொண்ட நபராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.

Narendra Modi
Narendra Modi
author img

By

Published : Jan 10, 2021, 7:00 PM IST

Updated : Jan 11, 2021, 8:35 AM IST

பிரபலங்களின் முகமாகவும் முகவரியாகவும் சமூக வலைதளமான ட்விட்டர் விளங்கிவருகிறது. முன்னணி அரசியல் தலைவர்கள் தங்கள் அறிவிப்புகளை ட்விட்டர் மூலமே மேற்கொண்டுவருவதால், அவர்களது ட்விட்டர் கணக்குகள் உலகளவில் பலராலும் பின்பற்றப்படுகின்றன.

அண்மையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு வன்முறையைத் தூண்டும்விதமான கருத்துகளைப் பரப்புவதாக குற்றஞ்சாட்டப்பட்டு முடக்கப்பட்டது. நிகழ்கால அரசியல் தலைவர்களில் அதிகம் ஃபாலோயர்களை (பின்பற்றுபவர்கள்) டொனால்ட் ட்ரம்ப் கொண்டிருந்தார். ட்ரம்பை சுமார் 8.87 கோடி பேர் பின்பற்றிவந்தனர். அதற்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடியை 6.47 கோடி பேர் பின்பற்றிவருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கம்
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கம்

தற்போது ட்ரம்பின் கணக்கு முடக்கப்பட்டதால், நிகழ்கால அரசியல் தலைவர்களின் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நபராக நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனை 2.33 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.

அதேவேளை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை 2.42 கோடி பேரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 2.12 கோடி பேரும் பின்பற்றுகின்றனர்.

தற்போது களத்தில் இல்லாமல் ஓய்வுபெற்ற நபர்களில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ட்விட்டர் கணக்கைத்தான் 12.79 கோடி பேர் ஃபாலோ செய்கின்றனர். எனவே, ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் பட்டியலில் ஒபாமாதான் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: மூன்றாம் பாலினத்தவருக்கு பிரத்தியேக அடையாள அட்டை; முன்னுதாரணமாக திகழும் மத்தியப் பிரதேசம்

Last Updated : Jan 11, 2021, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.