ETV Bharat / bharat

குருத்வாரா வன்முறை: காவலர்களை தாக்கிய 14 பேர் கைது

author img

By

Published : Mar 30, 2021, 7:02 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் நான்டாட் ஹசூர் சாஹிப் குருத்வாரா வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Nanded gurdwara violence
Nanded gurdwara violence

மகாராஷ்டிரா மாநிலம் நான்டாட் ஹசூர் சாஹிப் குருத்வாராவில் நேற்று வன்முறை வெடித்தது. ஹோலிக்கு மறுநாள் அங்கு மதப் பேரணி நடைபெறுவது வழக்கம். மகாராஷ்டிராவில் தற்போது, கோவிட்-19 பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனை மீறி பேரணி செல்ல முயன்ற சீக்கியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது சிலர் தடுப்புகளை உடைத்து காவல்துறையினரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதில் நான்கு காவலர்கள் காயமடைந்தனர். ஆறு வாகனங்கள் சேதமடைந்தன.

இதுதொடர்பாக 64 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைக்குப் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் துறையை வைத்து வாக்காளர்களை மிரட்டும் பாஜக - மம்தா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.