இந்தியாவைச் சேர்ந்த நாகேஷ்வர் ரெட்டிக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான ’ருடோஃப் சிண்ட்லர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர் ஆவார். பத்ம பூஷன் விருது பெற்ற இந்தியாவின் முன்னணி குடல்நோய் நிபுணரான நாகேஷ்வர் ரெட்டிக்கு இந்த விருது மெய்நிகர் காணொலிக் காட்சி வாயிலாக வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னணி குடல்நோய் நிபுணரான டாக்டர் சிண்ட்லரின் நினைவாக ஆண்டுதோறும் ASGE (American Society of Gastrointestinal Endoscopy) என்ற அமைப்பால் இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விருதைப் பெறுவதில் தான் பெருமை கொள்வதாகவும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மருத்துவ வளர்ச்சியை உலகின் முன்னணி அமைப்பு மதித்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாகவும் நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு ட்ரம்ப் சாப்பிட்ட மருந்து, இந்தியாவிலும் விற்பனை: ஒரு டோஸ் விலை தெரியுமா?