டெல்லி: தமிழ்நாடு வரும் ஜேபி நட்டா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரி யூனியனில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா இரு நாள்கள் பயணமாக ஜன.29-30ஆம் தேதிகளில் தமிழ்நாடு வருகிறார்.
29ஆம் தேதி மாலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். அதன்பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பிப்ரவரி இறுதியில் மீண்டும் ராகுல்காந்தி தமிழ்நாடு வர வாய்ப்பு'- கே.எஸ். அழகிரி