ETV Bharat / bharat

தடுப்பூசியில் எதிர்க்கட்சிகள் அரசியல்!

நாட்டு மக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இதனை மக்கள் அறியும்படி அம்பலப்படுத்த வேண்டும் என ஜெபி நட்டா கேட்டுக்கொண்டார்.

Nadda
Nadda
author img

By

Published : Jun 18, 2021, 6:58 PM IST

டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா வெள்ளிக்கிழமை (ஜூன் 18) பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, “நாட்டு மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட திட்டங்களில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்த விவகாரத்தை மக்களிடம் தோலுரித்து காட்டுங்கள்” எனக் கட்சி எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கோவிட் பெருந்தொற்றை மத்திய அரசு சிறப்பாக எதிர்கொண்டுவருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்கின்றன. மக்களை குழப்புகின்றன.

தடுப்பூசிக்கு எதிரான போரில் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்புகின்றன. ஏன் பொதுமுடக்கம் கொண்டுவந்தீர்கள் என அரசியல் விளையாடுகின்றனர். நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு கொண்டுவந்தபோது, தடுப்பூசியை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும் கூறினார்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது மத்திய அரசின் பணியாகும். அதே நேரத்தில் தடுப்பூசிகளை வீணாக்குவது மாநிலத்தின் பணியாக திகழ்கிறது. காங்கிரஸின் மணீஷ் திவாரி மற்றும் சசிதரூர் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களை பீதிக்குள்ளாக்கினார்கள்.

நாங்கள் என்ன சோதனை எலிகளா? எனக் கேள்வியெழுப்பினார்கள். இவர்களெல்லாம் இன்னமும் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேவரவில்லை. ட்விட்டரிலே அரசியல் செய்கின்றனர்.

கோவிட் பெருந்தொற்றை கையாளுவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுரைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. வயது வாரியாக தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார்.” என்றார்.

இதையும் படிங்க: ’தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கையில் அரசியல் செய்யும் பாஜக’ - கபில் சிபல் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.