கான்பூர் : உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் திங்கள்கிழமை (செப்.27) நடந்த சோதனையில் ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழந்தார்.
இவரை ஆறு காவலர்கள் தாக்கி கொன்றதாக அவரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதனை உடற்கூராய்வு அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.
உடற்கூராய்வு அறிக்கை
அந்த உடற்கூராய்வு அறிக்கையில் ரியல் எஸ்டேட் அதிபர் மணீஷ் குப்தா உடலின் முழங்கை, தலை மற்றும் தசைகளில் பலத்த காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மணீஷ் குப்தா தனது நண்பருடன் கோரக்பூருக்கு சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடந்துவருகிறது என காவல் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மனைவி கண்ணீர்
இதற்கிடையில், கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் குடும்பத்தினர், ஹோட்டலில் நடந்த சோதனையின் போது அவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மணீஷ் குப்தாவின் மனைவி மீனாட்சி குப்தா கூறுகையில், “நான் எனது கோரிக்கைகளை முதலமைச்சர் முன் வைப்பேன். என் கணவர் பணியில் இருந்த 6 போலீசாரால் கொல்லப்பட்டார்” என்றார்.
கோரிக்கை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க : 'காங்கிரஸிற்கு கல்தா, பாஜகவுக்கு நோ'- அமரீந்தர் சீக்ரெட்!