மகாராஷ்டிாராவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி(மகா விகாஸ் அகாதி) ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில், சிவசேனா தலைமை ஏற்றுள்ளது.
பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவே, இந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், இக்கூட்டணி ஐந்தாண்டுகளை நிறைவு செய்யாது என, தொடர் விமர்சனத்தை பாஜக முன்வைத்துவருகிறது.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதிலடி தந்துள்ளார். பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மூன்று கட்சிகளுக்கு இடையே எந்தவித கருத்து வேறுபாடு இல்லை.
எந்த விவகாரம் என்றாலும், மூன்று கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஒன்றாக விவாதித்தே முடிவெடுக்கின்றனர்.
எனவே, இந்தக் கூட்டணி அரசு ஐந்தாண்டுகளை நிச்சயம் நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: 'அனைவருக்கும் தடுப்பூசி... அதன்பின் மனதின் குரல்' - ராகுல் தாக்கு!