- செப்டம்பர் 18ஆம் தேதி, குஜராத்தின் முந்த்ராவில் அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் நடத்திய சோதனையில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,988. 22 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
- ஆப்கனில் இருந்து விஜயவாடாவில் இயங்கிவரும் நிறுவனத்தின் பெயரில், முகத்துக்குப் பூசும் பவுடர் (TALCUM POWDER) கொண்டுவரப்பட்ட இரண்டு கண்டெய்னர்களில் இருந்து ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஒரு கண்டெய்னரில் 1,999.58 கிலோ ஹெராயினும், மற்றொரு கண்டெய்னரில் 988.64 கிலோ ஹெராயினும் இருந்தது. உலகின் மிகப்பெரிய ஹெராயின் பறிமுதல் இது எனக் கூறப்பட்டது.
- கண்டெய்னரில் குறிப்பிடப்பட்ட நிறுவனத்தின் ஜிஎஸ்டி எண்ணை வைத்து விசாரித்தபோது, சென்னையைச் சேர்ந்த தம்பதியான துர்கா, மச்சாவரம் சுதாகர் ஆகியோரின் நிறுவனம் எனத் தெரியவந்தது.
- சென்னை கொளப்பாக்கத்தில் தனது தந்தை வீட்டில் பதுங்கியிருந்த துர்காவையும், அவரது கணவரான மச்சாவரம் சுதாகரையும் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் கைது செய்து 10 நாள்கள் காவலில் எடுத்தனர்.
- தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கண்டெய்னர்கள் விஜயவாடாவுக்கு செல்லாமல் டெல்லிக்கு செல்லவிருந்தது தெரியவந்தது.
- சுதாகர் - துர்கா தம்பதி தெரிவித்த தகவல்களை வைத்து, சென்னை, நொய்டா, கோயம்புத்தூர், டெல்லி, அகமதாபாத், மந்த்வி, காந்திதம், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் டிஆர்ஐ அலுவலர்கள் சோதனையிட்டனர்.
- டெல்லி குடோனில் 16.1 கிலோ ஹெராயினும், 10.2 கிலோ கோகைனும், நொய்டாவில் 11 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது.
- 3,000 கிலோ ஹெராயின் பிடிபட்ட வழக்கில், பெரிய திருப்பமாக ஆப்கனைச் சேர்ந்த நான்கு பேர், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், ராஜ்குமார் என்பவரும் கைதான நிலையில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஹெராயின் பிடிபட்ட விவகாரத்தில் வெளிநாட்டினருக்குத் தொடர்பு இருப்பதால், வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது
TOP 10 HIGHLIGHTS: 3,000 கிலோ ஹெராயின் வழக்கு முழு பின்னணி! - மச்சாவரம் சுதாகர்
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் வழியாக 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்த முயன்ற வழக்கின் முக்கிய பத்து நிகழ்வுகள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம்.
3000 கிலோ ஹெராயின் விவகாரம்