ETV Bharat / bharat

சிறுத்தையை கைத்தடியால் அடித்து விரட்டிய மூதாட்டி - மும்பையில் சிறுத்தை தாக்குதல்

மகாராஷ்டிராவில் மூதாட்டி ஒருவர் தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை கைத்தடியால் அடித்து விரட்டிய தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.

Viral Video
Viral Video
author img

By

Published : Sep 30, 2021, 12:23 PM IST

Updated : Oct 1, 2021, 8:57 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஆரே பகுதியில் மூதாட்டி ஒருவரை சிறுத்தை ஒன்று தாக்க வந்துள்ளது. அந்த சிறுத்தையை கையில் உள்ள தடியைக் கொண்டு அடித்து விரட்டிய காணொலி சிசிடிவில் பதிவாகியுள்ளது.

மூதாட்டியின் இந்த வீர செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. தன்னை தாக்க வரும் சிறுத்தையை கைத்தடிக் கொண்டு திருப்பி அடிக்க, அந்த சிறுத்தை பின்வாங்கி ஓடியுள்ளது. இந்த சம்பவத்தில் மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சிறுத்தையை கைத்தடியால் அடித்து விரட்டிய வீரப்பெண்

இந்த ஆரே காலணிக்குள் சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் தீவிரமாகிவருகிறது. அங்கு வசிக்கும் பொது மக்களை சிறுத்தை தொடர்ந்து தாக்கிவருவதால், குடியிருப்பு வாசிகள் பீதியடைந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் வனத்துறையினர் விரைந்து தலையிட்டு சிறுத்தையை பிடித்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் ஊசி செலுத்திய செவிலி - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

Last Updated : Oct 1, 2021, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.