ETV Bharat / bharat

ஆன்லைனில் பீட்சா ஆர்டர்: ரூ. 11 லட்சத்தை இழந்த மூதாட்டி - மூதாட்டியிடமிருந்து ரூ. 11 லட்சம் பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்

ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த மூதாட்டியிடமிருந்து ரூ. 11 லட்சம் பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.

Pizza cyber crime in Mumbai
ஆன்லைனில் பீட்சா ஆர்டர்
author img

By

Published : Jan 16, 2022, 10:49 PM IST

மும்பை: ஆன்லைனில் ரூ. 11 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மூதாட்டி ஒருவர், மும்பை BKC சைபர் பிரிவு காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த மூதாட்டி, ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்யும்போது தவறுதலாக ரூ. 9, 999 இழந்துள்ளார்.

அதேபோன்று அக்டோபர் 29ஆம் தேதியன்று உலர் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தபோதும் ரூ. 1, 496 இழந்துள்ளார்.

இதனையடுத்து, தான் இழந்த தொகையை திரும்பப்பெறும் நோக்கில் இணையதளத்தில் தேடிய போது, அதில் கிடைத்த ஒரு எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

இதனைப் பயன்படுத்திய மோசடி செய்யும் நபர், அந்த மூதாட்டியிடம் அவரது செல்போனில் ஒரு செயலியைப் பதிவிறக்க நிர்பந்தித்துள்ளார்.

அந்த மூதாட்டி அதனை பதிவிறக்கியதும், அச்செயலி வாயிலாக அப்பெண்ணின் வங்கிக் கணக்கு, கடவுச் சொல் பொன்ற விவரங்களை சேகரித்துள்ளார், அந்த நபர்.

இதன் தொடர்ச்சியாக, சென்ற ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை, அப்பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 11.78 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மூதாட்டி, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இவ்விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Online crime: அரசு வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருட்டு - மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.