ETV Bharat / bharat

மும்பைக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்... மீண்டும் நவம்பர் 26 தாக்குதலா...

author img

By

Published : Aug 20, 2022, 11:13 AM IST

மும்பை நவம்பர் 26 தாக்குதல் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் செய்தி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.

மீண்டும் நவம்பர் 26 தாக்குதலா
மீண்டும் நவம்பர் 26 தாக்குதலா

மும்பை: இந்திய வரலாற்றில் 2008ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி என்பது மீளமுடியாத துயரை ஏற்படுத்திய தினம். அன்றுதான் மும்பையில் கடல் மார்க்கமாக ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள் மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரத் தாக்குதல்களில் பொதுமக்கள், வெளிநாட்டினர், காவல் துறையினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர்.

வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்திகள்
வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்திகள்

இந்நிலையில், மும்பையில், நவம்பர் 26 தாக்குதலை போன்று, மற்றொரு பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என தற்போது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து காவல் துறை, கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்திகள் வந்துள்ளன.

ஆறு பயங்கரவாதிகள் இந்தியாவில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர் என அந்த மிரட்டல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட விசாரணையில், இந்த மிரட்டல் செய்திகள் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்திகள்
வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்திகள்

இதுகுறித்து ஒரு காவல் துறை அதிகாரி கூறுகையில்,"மத்திய மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு எழுத்து வடிவில் மிரட்டல் செய்தி வந்துள்ளது. அவை நேற்றிரவு (ஆக. 19) 11 மணியளவில் அனுப்பட்டுள்ளது.

அந்த செய்திகளில் நவம்பர் 26 தாக்குதலை போன்று தாக்குதல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது" என்றார்.

வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்திகள்
வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்திகள்

இதையும் படிங்க: திரிபுராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு... பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.