ETV Bharat / bharat

வெள்ளம்: மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம் - வெள்ளம்

மழை வெள்ளத்துக்குப்பின் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

வெள்ளம்: மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

author img

By

Published : Jul 26, 2021, 6:20 PM IST

மும்பை (மகாராஷ்டிரா): அண்மையில் தென்மேற்குப் பருவக்காற்றின் தீவிரத்தினால், மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு இருந்தது. இதனால் ஆறுகள் பலவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக வசிஷ்டி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டதால், அப்பாலத்தின் மீது செல்ல வாகனங்களுக்கு கடந்த 5 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டது. இதனால் முக்கிய வழித்தடமான மும்பை - ரத்னகிரி - கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம், கடுமையாக உழைத்து நீர் வடிவதற்கு உண்டான பணிகளை செய்தது. அதேபோல் வசிஷ்டி நதியின் வெள்ள வீரியமும் மெல்ல குறையத்தொடங்கியது.

இதையடுத்து, போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்ட மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பாக வசிஷ்டி ஆற்றின் மேம்பாலம் வழியாக போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இதையும் படிங்க:நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எஸ் சொன்ன உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.