ETV Bharat / bharat

காஷ்மீரில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள் - பொதுமக்களுக்கு அனுமதி

காஷ்மீரில் 32 வருடங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டதையடுத்து இன்று (அக்-1) பொதுமக்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

Etv Bharatகாஷ்மீரில் மீண்டும் திறக்கப்பட்ட  திரையரங்குகள் - பொதுமக்கள் அனுமதி

author img

By

Published : Oct 1, 2022, 3:57 PM IST

ஸ்ரீநகர்: நீண்ட ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் காஷ்மீரின் ஸ்ரீநகர் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் இன்று (அக்-1) திரைப்படங்களை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஒரே நேரத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடித்த விக்ரம் வேதா மற்றும் தென்னிந்தியத் திரைப்படமான பொன்னியின் செல்வன் 1 ஆகிய 2 படங்கள் திரையிடப்பட்டன.

மல்டிபிளக்ஸ் உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமான விஜய் தார் இதுகுறித்து கூறுகையில், ‘ஸ்ரீநகர் நகரின் ஷிவ்புரா பகுதியில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் 520 பேர் அமரக்கூடிய மூன்று திரைகள் உள்ளன. ஆனால், தற்போது 2 திரைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன’ எனக் கூறினார். மேலும் இரண்டு படங்களுக்கான டிக்கெட் விலை டிக்கெட் விலை ரூ.260 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.

கடந்த 1990ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டன. பின் 1999ஆம் ஆண்டில் 3 திரையரங்குகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முயற்சித்தது. அப்போதும் தீவிரவாத தாக்குதலால் மூடப்பட்டன. செப்டம்பர் 20ஆம் தேதி, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவால், இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கை திறந்து வைத்தார். அப்போது அமீர் கானின் லால் சிங் சதா திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது.

இதையும் படிங்க:30 ஆண்டுகளுக்குப்பின் காஷ்மீரில் சினிமா தியேட்டர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.