லக்னோ : முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ், இவரின் மனைவி அபர்ணா யாதவ். இவருக்கு 2017 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும் இவரால் வெற்றி பெறமுடியவில்லை, பாஜகவின் ரீட்டா பகுணாவிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள சூழலில் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தால் அது அக்கட்சிக்கு லாபமாக அமையும். ஏனெனில் அக்கட்சியில் இருந்து வரிசையாக இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை (ஒபிசி) சேர்ந்த தலைவர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்துவருகின்றனர்.
அண்மையில் பாஜகவின் முன்னாள் அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் எம்எல்ஏ மற்றும் தங்களின் ஆதரவாளர்களுடன் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
இதற்கிடையில், ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள சிர்சாகஞ்ச் தொகுதியில் உள்ள சமாஜவாதி கட்சியின் எம்எல்ஏ ஹரிஓம் யாதவ் புதன்கிழமை (ஜன.12) டெல்லியில் மூத்த மாநிலத் தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேசத்தில் காட்சிகள் மாறுகின்றன- சரத் பவார்!