மத்தியப் பிரதேசம்: இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி மெமோரியல் (எம்ஜிஎம்) மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புகார் எண்ணை தொடர்பு கொண்டு அக்கல்லூரி மாணவர்கள் மீது குற்றவியல் வழக்கை (ஜூலை 24) பதிவு செய்தார்.
அவர் கொடுத்த புகாரில் அந்த மாணவரின் விவரங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விவரங்கள் இல்லாமல் ராகிங் சம்பவம் குறித்த முழு விவரங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை புகாரில் கூறப்படவில்லை என்று சன்யோகிதகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் தெஹ்சீப் காசி தெரிவித்தார்.
இந்த புகாரை அடுத்து கல்லூரியில் விசாரணை நடத்த மாணவியாகச் சென்ற பெண் காவலர் தலைமையில் போலிசார் குழுவாக மஃப்டியில் சென்றனர். மற்றொரு பெண் காவலர் செவிலியராகவும், மேலும் 2 காவலர்கள் கேன்டினில் பணிபுரிபவர்களாகவும் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் இந்த ராகிங் வழக்கில் தொடர்புடைய 11 மாணவர்கள் பிடிபட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட கல்லூரி சீனியர் மாணவர்களிடம் செய்யப்பட்ட விசாரணையில் அவர்கள் ஜூனியர் மாணவர்களை அருவருக்கத்தக்கச் செயல்களைச் செய்ய தூண்டியுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் ரேகிங் வழக்கில் பிடிபட்ட மாணவர்களை உடனடியாக மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்தது.
இதையும் படிங்க: வைத்தியம் பார்க்க வந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவர் கைது