இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், மன்பூர் நகரைச் சேர்ந்த அர்ஜூன் சிங்காரே (19) என்ற பழங்குடியின இளைஞரை, கடந்த 2ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அடுத்த நாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அர்ஜூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினரின் அடித்ததன் காரணமாகவே இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆக்ரா- மும்பை தேசிய நெடுஞ்சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் பகவத் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது