போபால்: பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி. இவர், கடந்த புதன்கிழமையன்று (ஜன.26) தான் புதிதாக நடிக்கவிருக்கும் இணையத் தொடரின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.
அந்நிகழ்வில், “என் ப்ராவை கடவுள் அளவீடுகிறார்” எனப் பொருள்படும் படி நகைச்சுவையாக கூறியதாக கூறப்படுகிறது. இந்தக் கருத்து சர்ச்சையான நிலையில் ஸ்வேதா திவாரிக்கு எதிர்ப்பு கிளம்பியது. வலைதள வாசிகள் சிலர் ஆதரவும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இக்கருத்து தொடர்பாக, “ஸ்வேதா திவாரி மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “ஸ்வேதா திவாரி கூறியிருக்கும் கருத்து கடும் கண்டனத்துக்குரியது, எந்தச் சூழலிலும் கடவுளை அவமதிக்கும் ரீதியிலான கருத்துகளை பொறுத்துக்கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.
மேலும், போபால் காவல் துறை ஆணையருக்கு, ஸ்வேதா திவாரி கூறிய கருத்து குறித்து தகவல்களைத் திரட்டி, 24 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, போபால் காவல் துறையினர் ஸ்வேதா திவாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு - போராட்டம்