ETV Bharat / bharat

நவ்நீத் ராணா ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு - Navneet Rana CCTV Video

ஹனுமன் சாலீசா வழக்கில் எம்.பி. நவ்நீத் ராணா, அவரது கணவர் ரவி ராணா கோரிய ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வீட்டு உணவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

mp-navneet-rana-bail-plea-hearing-postponed-tomorrow

author img

By

Published : Apr 29, 2022, 9:22 PM IST

மும்பை: மகாராஷ்டிரா முதமைச்சர் வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா என்ற மந்திரத்தை கூறப்போவதாக எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணா இருவரும் அறிவித்தனர். இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மீது போலீசில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், ஏப்ரல் 23ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இருவரும் ஜாமீன் கோரினர். ஆனால், நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணை ஏப். 29ஆம் தேதி நடத்தப்படும் என்று கூறி, இருவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி ரவி ராணா ஆர்தர் ரோடு சிறைக்கும், நவ்நீத் ராணா பைகுல்லா சிறைக்கும் அனுப்பப்பட்டனர். அந்த வகையில், இன்று (ஏப். 29) ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் காலஅவசாகம் கேட்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதி மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். இதனிடையே வீட்டு உணவுக்கும் அனுமதி கோரிய விண்ணப்பத்தையும் நீதிபதி நிராகரித்தார்.

இதையும் படிங்க: நான் பட்டியலினம் என்பதால் தண்ணீர் கொடுக்கவில்லை... எம்பி நவநீத் ராணா பரபரப்பு குற்றச்சாடு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.