மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு வாரமாக பெய்துவந்த கனமழையால் சிவபுரி, சியோப்பூர், குவாலியர், தாடியா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாடியா மாவட்டத்தில் சிந்து நதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதனால், இந்திய விமானப் படையினர் உதவியுடன் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 1,171 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தாடியா மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட சென்றிருந்தார். அப்போது, அவர் சென்றிருந்த படகு பழுதடைந்தது. அதன் காரணமாக அலுவலர்களுடன் அவரும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து உடனே மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் அங்கு விரைந்த இந்திய விமானப் படையினர், அவரைப் பாதுகாப்பாக மீட்டனர். இதுகுறித்த காணொலி தற்போது அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: மேற்கு வங்க வெள்ளம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்