மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில், கடந்த மார்ச் 29ஆம் தேதி, சட்டவிரோதமாகச் சாராயம் விற்பனைசெய்த 23 வயதான பெண் உள்பட மூவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தாய் சிறையில் அடைக்கப்பட்டதால், பிரிவைத் தாங்க முடியாமல் அவரது எட்டு மாத குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்பெண்ணுக்குப் பிணை வழங்கக்கோரி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் மனு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பால், உடனடியாக அப்பெண்ணுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இது குறித்து அப்பெண்ணின் வழக்கறிஞர் கூறுகையில், "தாயின் பிரிவைத் தாங்க முடியாததால் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தாய்ப்பாலும் கிடைக்காததால், குழந்தையின் உடல்நிலை மேலும் மோசடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், குழந்தையைத் தாயாருடன் சிறையில் வைத்திட இயலாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒட்டன்சத்திரம் மாணவனின் முதல் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை