சாத்னா (மத்தியப் பிரதேசம்) : மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் 4 நாள்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது திங்கள்கிழமை (ஜூலை 12) நிறைவுப் பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநிலத்துக்கு மாநிலம் வியூகங்கள் வகுப்பது, ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சமூக வலைதளம் உருவாக்குவது, அதை நிர்வகிக்க நிபுணர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம், குறிப்பாக அங்குள்ள நிலம் வாங்கியதில் எழுந்த சர்ச்சை, அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வியூகங்கள் அமைப்பது, ஆர்எஸ்எஸ் கிளைகளை அதிகரிப்பது குறித்தும் பேசியுள்ளனர். இதற்கிடையில், சமீபத்தில் முடிவடைந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலைப் பற்றி ஒரு சிறப்பு விவாதம் நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டு முதல், மேற்கு வங்காளத்தில் ஆதிக்கம் செலுத்த ஆர்எஸ்எஸ் சங்கம் அதிகம் முயற்சித்துவருகிறது.
அங்கு தொடர்ச்சியான முயற்சிகள் இருந்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. ஆகையால் வருங்காலத்தில் சங்கம் அங்கு வலுவுடன் செயல்படவும் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் - ராகுல் காந்தி