ETV Bharat / bharat

ரயில் இன்ஜினில் சிக்கிய முதியவர்: துரிதமாகச் செயல்பட்ட மோட்டார்மேன்! - old man fell on railway tracks

மும்பையில் ரயில் இன்ஜினில் சிக்கிய முதியவர் ஒருவர், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

railway track
ரயில் இன்ஜினில் சிக்கிய முதியவர்
author img

By

Published : Jul 19, 2021, 7:31 PM IST

மும்பை அருகிலுள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட முதியவர் ஒருவர், நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹரிபிரசாத் என்ற 70 வயது முதியவர் ஒருவர், கல்யாண் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, மும்பை-வாரணாசி ரயில் நடைமேடையிலிருந்து புறப்படுவதைப் பார்த்த அவர், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் தண்டவாளத்திலேயே நின்றுள்ளார்.

முதியவர் நிற்பதைப் பார்த்த ரயில் மோட்டார்மேன் பிரதான், தொடர்ச்சியாக ஹாரன் அடித்துள்ளார். ஆனால், முதியவர் அந்த இடத்தைவிட்டு நகராததால், உடனடியாக பிரதானும், உதவி மோட்டார்மேன் ரவியும் துரிதமாகச் செயல்பட்டு, எமர்ஜென்சி பிரேக் பிடித்து ரயிலின் வேகத்தைக் குறைத்தனர்.

ரயில் இன்ஜினில் சிக்கிய முதியவர் மீட்பு

ரயில் பக்கத்தில் வந்ததால், முதியவர் பயத்தில் அப்படியே தண்டவாளத்தில் படுத்துவிட்டார். இருப்பினும், ரயில் இன்ஜின் முதியவர் படுத்திருந்த பகுதியைக் கடந்தே நின்றது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் ரயில் தண்டவாளத்திலிருந்து முதியவரைப் பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: மருத்துவருக்கு எமனான குரங்கு: சீனாவில் உருவெடுக்கும் புதிய வைரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.