தெலங்கானா மாநிலம், ஹுசுராபாத் நகரத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் கொக்கிசாலா வெங்கடேஷ். இவரது மனைவி ரமா (45), மகள் அமணி(24). வெங்கடேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. நீண்ட காலமாக வெங்கடேஷ், தனது மனைவி பெயரில் இருந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டுவந்துள்ளார். ஆனால் தொடர்ந்து ரமா அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், வீட்டிலிருந்த தனது மனைவி, மகளை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த சர்க்கிள் இன்பெக்ஸ்டர் வசம்செட்டி மாதவி சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த ரமா மற்றும் அமணி ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தார்.
அப்பகுதியில் உள்ளவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. வெங்கடேஷுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும், வீட்டை தனது பெயருக்கு மாற்றுவதற்காக வெங்கடேஷ், தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க:கணவரின் உறவினர்களால் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!