பானாஜி: அஜூர் ஏர் விமான நிறுவனத்தின் AZV2463 என்ற விமானம், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தெற்கு கோவாவில் உள்ள தாபோலிம் விமான நிலையத்துக்கு 240 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் தாபோலிம் விமான நிலையத்தில் அதிகாலை 4.15 மணிக்கு தரையிறக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு தாபோலிம் விமான நிலைய இயக்குனருக்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், மாஸ்கோவில் இருந்து கோவா வந்து கொண்டிருக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல் இருந்துள்ளது. இதனையடுத்து இந்திய வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பே, அவசரமாக இந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, மாஸ்கோவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானம் குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: London Paint : சுவரில் சிறுநீர் கழிப்பவர் மீது திருப்பி அடிக்கும் விஷேச பெயின்ட்.. ஜாக்கிரதை!