வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவத் புயல் இன்று கரைக்கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் வழியாக(கிழக்கு கடற்கரை ரயில்வே) செல்லும் சுமார் 75 ரயில்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த புயல் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து 210 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு நோக்க நகர்ந்து நாளை அதிகாலை ஒடிசா கரையை சேரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அங்கிருந்து மேற்கு வங்கம் நோக்கி நகரும் புயல் மெல்ல வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநில அரசுகளும் புயலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகிவருகின்றன. மாநில பேரிடர் மீட்புக் குழுவுடன் தேசிய பேரிடர் குழுவும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
அடுத்த இரு நாள்களுக்கு கடும் மழை ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு தங்க வைத்துவருகிறது.
இந்நிலையில், ஜவாத் புயலால் தமிழ்நாட்டின் எண்ணூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி, பாம்பன் ஆறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Omicron India cases: குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு