ராஜஸ்தான்: நாடு முழுவதும் கரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், ஜோத்பூரில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் 34 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பள்ளி ஊழியர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, லுனி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று நாள்களுக்கு அரசப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில தலைமை சுகாதார அலுவலர் ப்ரிதம் சிங் கூறுகையில், சுகாதாரத் துறை அலுவலர்கள் குழுக்களாகப் பிரிந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று தொடர்ந்து மாதிரிகளை சேகரித்து வருவதாகத் தெரிவித்தார். இதனால் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜோத்பூரில் தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 77% பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்