அயோத்தி (உத்தரபிரதேசம்): அக்டோபர் 23 ஆம் தேதி, அயோத்தியில் நடக்க ஆறாவது தீபத்ஸவத் திருவிழாவில் 14.50 லட்சம் மண் விளக்குகள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14.50 லட்சம் தீபங்களை ஏற்றி, இந்த சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் வரும் அக்டோபரில் நடக்க இருக்கும் தீபோத்சவ் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தீபத்சவ் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கரோனாவால் தடைப்பட்ட இந்த விழா தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்த ஆண்டு நடைபெறுகிறது. மேலும் கரோனா தொற்று குறைந்துள்ளதால் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான கூட்டம் கோட்ட ஆணையர் நவ்தீப் ரின்வா தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. நிர்வாகத்தின் அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கோட்ட ஆணையர் நவ்தீப் ரின்வா, "கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், முந்தைய ஆண்டுகளை விட தீபத்சவ் விழாவில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
நிலுவையில் உள்ள அனைத்து கட்டுமானப் பணிகளையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, விழா ஏற்பாடுகளைச் செய்யும்போது பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க:கிருஷ்ண ஜெயந்தி - தலைவர்கள் வாழ்த்து