டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கியது.
அப்போது எதிர்க்கட்சிகள் விவசாயிகள் பிரச்சினை, பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி கோஷம் எழுப்பின.
முதல் நாள் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்க முயன்றார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரை பேச அனுமதிக்கவில்லை. தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கூறிய பிரச்சினைகளை வியாழக்கிழமையான (ஜூலை 22) இன்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினார்கள்.
ஆகையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் (மக்களவை, மாநிலங்களவை) மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதையும் படிங்க : பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் அமளி!