டெல்லி : மாநிலங்களவை மற்றும் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவை மதியம் 12 மணிக்கு மீண்டும் தொடங்கிய நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் பேப்பருடன் பேச முயற்சித்தார். எனினும் அவரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக கார்கில் போர் வெற்றி, மீராபாய் சானுக்கு பாராட்டு தெரிவிக்க அவை மீண்டும் கூட்டப்பட்டது. எனினும், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
அதேபோல் மக்களவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2 மணிக்குப்பின்பும், அமளி தொடர்ந்ததால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையும் படிங்க : எடியூரப்பா ராஜினாமா- பின்னணி என்ன?