ETV Bharat / bharat

பல மாநிலங்களில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை - தென்மேற்குப் பருவமழை

ஜுன் 3 முதல் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிர மழைப்பொழிவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாநிலங்களில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை

author img

By

Published : Jun 14, 2021, 11:08 AM IST

டெல்லி: ஜுன் 3 முதல் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, நாட்டின் 85 விழுக்காட்டுப் பகுதிகளில் மழைப்பொழிவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 7ஆம் தேதி, தென்மேற்குப்பருவமழையின் தீவிரம் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார், ஜம்மு- காஷ்மீர், லடாக், ஹரியானாவின் சில பகுதிகள், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகியப் பகுதிகளில் இடைவிடாமல் பொழிந்தது.

இதுகுறித்து நேற்று(ஜுன் 13) இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலில், நாட்டின் தலைநகர் டெல்லியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் பருவமழை வரலாம் என்றும்; இந்த தென்மேற்குப் பருவமழை நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல மழைப்பொழிவைத் தரும் எனவும் கூறியுள்ளது.

ஜுன் 15 முதல் ஜுன் 16 வரை, ஹரியானா மற்றும் சண்டிகரில் காலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும்; பஞ்சாப், ஹரியானா பகுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் மகாநதி பாயும் டெல்டா பகுதிகளிலும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு காற்றுடன் கூடிய கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஒடிசா மாநிலத்தில் மகாநதி பாயும் பகுதியில் இருக்கும் ஹிராகுட் அணையில் நீர் மட்ட உயரம் 600.79 அடி இருக்கிறது என்றும், அது வரும் நாட்களில் மழைப்பொழிவினால் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒடிசா மாநிலத்தின் பார்கர், சுந்தர்கர், அங்கூள், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 72 நாள்களுக்கு பிறகு 70ஆயிரமாகக் குறைந்த கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.